Friday, July 31, 2009

அர்த்தமுள்ள பாட்டு!..



அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ம்ம்ம்ம்!. அப்படியா சரி ஓகே ஓகே ஆஆ!..
அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

ம்ம்ம்ம்... ஆரம்பிக்கலாமா ரெடியா ஜூட்
வானவில் பற்றி என்ன நினைகிறாய்?
மழையில் காயும் வர்ணச் சேலை
எப்படிரா ஓகேயா? பரவாயில்லை!..
அடி வாங்குவ படவா! நீ சொல்லு
பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்?
கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை

ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு

நிலாவை பற்றி என்ன நினைகிறாய்?
வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு!..
பரவாயில்லையாடா ம்ம்ம்.. தேவலாம்! அடி ஹஹ..
நிலாவை பற்றி நீ என்ன நினைகிறாய்?
ஆகாயத்தில் அமுதச் சாறு!..
நிலாவை பற்றி நீ என்ன நினைகிறாய்?
நைனா உன்னைத்தான்
ஏழைக்கு எட்டாத சோளச் சோறு!..
சபாஷ்!..

ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..


அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொ..ம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..
அடடடா!...

சாவு என்பதை நினைக்கிறாய்?
ம்ம்ம்.. c'mon
சாவு என்பதை என்ன நினைக்கிறாய்?
உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு!
சாவு என்பதை என்ன நினைக்கிறாய்?
கனவுகள் இல்லாத கடைசி நித்திரை!
சாவு என்பதை நீ என்ன நினைக்கிறாய்?
நான் எழுதிய கவிதைக்கு
யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி!
ஹே நைனா அழாதடா!..
c'mon cheerup my boy!..

ஆளுக்கொரு வரி சொன்னா சரியாப்போச்சு
ஆளுக்கொரு வரியை சொல்லி
பாட்டு பாடு!..
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும்
தாளம் போடு!..
Yaaa...
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்லவி எதுக்கு!..
சபாஷ்!..
ய யம்மா யம்மா யம்மா யம்மா
பல்வலி எதுக்கு!..
சபாஷ்!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சாரம் இருந்தால்!..
fantastic!..
ய யய்யா யய்யா யய்யா யய்யா
சரணம் எதுக்கு!..

Wednesday, July 22, 2009

ஆயிரம் நிலவே வா!...


படம்: அடிமைப்பெண் (1969)
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் எஸ்.பி., சுசீலா.பி
இசை: K V மகாதேவன்
வரிகள்: புலமைப்பித்தன்
நடிப்பு: ஜெயலலிதா, MGR




ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாடப் பாட

(ஆயிரம்...)

நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க...
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ

(ஆயிரம்...)

மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்த வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்த வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

(ஆயிரம்...)

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விளக்க வேர்த்து நின்றால்
ஆஆஆ...பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
ஆஆ..தென்றல் எனும் காதலனின் கை விளக்க வேர்த்து நின்றால்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

(ஆயிரம்...)

Tuesday, July 21, 2009

சுவாசமே!...சுவாசமே!...


படம்: தெனாலி (2000)
பாடியவர்கள்: பாலசுப்ரமணியம் எஸ்.பி., சாதனா சர்கம்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: பா.விஜய்
தயாரிப்பாளர்கள்: எஸ்.பி.பி., கற்பகம் ரவிக்குமார்
இயக்குனர்: கே.எஸ்.ரவிக்குமார்



என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னைக் கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல
சுவாசமே...சுவாசமே...

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)

சுவாசமே...சுவாசமே...
சுவாசமே...சுவாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள (2)
இதயம் தான் சரிந்ததே, உன்னிடம் மெல்ல

வாசமே...வாசமே...
வாசமே...வாசமே...
என்ன சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல........

(ஜன்னல் காற்றாகி .....)

இடது கண்ணாலே அஹிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே வன்முறை செய்தாய் (2)
ஆறறிவோடு உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்வரக் கண்டேன்

இயற்கை கோளாரில் இயங்கிய என்னை
செயற்கை கோளாக உன்னை சுற்றவைத்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்
அணு சக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய்

சுவாசமே... சுவாசமே...

இசைத் தட்டுப் போலே இருந்த என் நெஞ்சை
பறக்கும் தட்டாகப் பறந்திடச் செய்தாய்
நதிகள் இல்லாத அரபு தேசம் நான்
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்

நிலவு இல்லாத புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்
கிழக்காக நீ கிடைத்தாய்
விடிந்து விட்டேனே

வாசமே...வாசமே...
என்ன சொல்லி!..

என்ன சொல்லி என்னைச் சொல்ல
காதல் என்னை கையால் தள்ள

ஜன்னல் காற்றாகி வா
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி வா
உயிரின் மூச்சாகி வா (2)

சுவாசமே... சுவாசமே...சுவாசமே...

Monday, July 20, 2009

பனி விழும் மலர் வனம்!...


படம் : நினைவெல்லாம் நித்யா
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பி.




பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம் (2)
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம் (2)
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
ஹெஹெ!.. இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை
மாலை சூடும் மலர்மாலை (2)
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளி விடும்
ஹெஹெ!.. இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர் விடும்
கைகள் இடைகளில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்

(பனி விழும்....)

காமன் கோயில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹா பரிகாசம் (2)
தழுவிடும் பொழுதிலே இடமாறும் இதயமே
ஹெஹெ!.. வியர்வையின் மழையிலே
பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

(பனி விழும்...)

Sunday, July 19, 2009

புதிய பூவிது பூத்தது!...



புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ.... சேதி சொன்னதோ....
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ....
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?......
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ
கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ
தள்ளாடும் தேகஙளே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான்...
ஆஆஆஆ....

(புதிய பூவிது..........)

கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ
தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை தந்ததும்
உண்டாகுமோ தேன்....

(புதிய பூவிது..........)

Thursday, July 16, 2009

பொத்தி வெச்ச மல்லிக மொட்டு!...



பொத்தி வெச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசிப் பேசி ராசி ஆனதே....
மாமன் பேரச் சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே

பொத்தி வெச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு (பொத்தி..)
பேசிப் பேசி ராசி ஆனதே....
மாமன் பேரச் சொல்லி சொல்லி
ஆளானதே ஹஹான்!..
ரொம்ப நாளானதே ஹ்ம்ஹ்ம்ம்....

மாலை இளங்காத்து அள்ளி இருக்கு
தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு
இது சாயங்காலமா மடி சாயும் காலமா
முல்லைப் பூச்சூடு மெல்லப் பாய் போடு
அட வாடக் காத்து சூடு ஏத்துது

(பொத்தி வெச்ச மல்லிக மொட்டு...)

ஆத்துக்குள்ளே நேத்து உன்ன நெனச்சேன்
வெட்க நிறம் போக மஞ்சக்குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா
அது கூடாது இது தாங்காது
சின்ன காம்பு தானே பூவத் தாங்குது

(பொத்தி வெச்ச மல்லிக மொட்டு .....)

Wednesday, July 15, 2009

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்!...



இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...


(இன்னும்...)

பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே

பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு...

புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே....

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே...
உன்னை சேர்ந்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா....

தேன்கள் இதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் வானமுத சாதனனே

நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி

தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...
ஆஹா என்னைக் கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
சொல்லு சொல்லு சிங்கார வேலா....

இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே... அன்பே... அன்பே...
என்னைக் கண்டால்
என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே... அன்பே!...

Monday, July 13, 2009

அந்தி மழை பொழிகிறது!...



அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை...)

ஆஆஆஆஆஆஅ........
தேனில் வண்டு மூழ்கும் போது ஆஆஆஆ....
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்
தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே

(அந்தி மழை...)

தேகம் யாவும் தீயின் தாகம் ஆஆஆஆஆ....
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது....

Saturday, July 11, 2009

ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா!..



ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அடி... ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட! அக்கம் பக்கம் யாரும் இல்லை
அள்ளிக்கலாம் வா புள்ளே!...
ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...

ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம
அணைக்கத் துடிச்சிருக்கேன்!...
அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்!...
தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீவாம்மா
மாருல குளிருது சேத்தெனை அணைச்சா
தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க!...


ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா....
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட... அக்கம் பக்கம் யாரும் இல்லை
அள்ளிக்கலாம் வா புள்ளே!...ஏய்....

நான்போறேன் முன்னால நீவாடி பின்னாலே
நாயக்கர் தோட்டத்துக்கு!...
பேசாதே கண்ணால என்னாடி அம்மாலி
வாடுற வாட்டத்துக்கு!...
சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது
செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது
பவழ வாயில தெரியுற அழகப்
பாத்ததுமே மனசும்பட்டுத் துடிக்குது!...

ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா.... ஆஆஅ!...
நான் பார்த்தா பார்க்காமலே போறியா...
அட... அக்கம் பக்கம் யாரும் இல்லை
அள்ளிக்கலாம் வா புள்ளே!...
ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா.... ஆஆஅ!...
நான் பார்த்தா பார்க்காமலே போறியா... (விசில்)

Wednesday, July 8, 2009

பொட்டு வைத்த முகமோ!...



பொட்டு வைத்த முகமோ...
கட்டி வைத்த குழலோ...
பொன்மணிச் சரமோ.....
அந்தி மஞ்சள் நிறமோ...
அந்தி மஞ்சள் நிறமோ...

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ... கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ......
அந்தி மஞ்சள் நிறமோ...
அந்தி மஞ்சள் நிறமோ...

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்....

(பொட்டு வைத்த.....)

ஆஆஆஆஆஆஆஅ.........
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா...
என்னுடன் கலந்தால்.... லலாலலாலலாலலா...

ஆஆஆஆஆஆஆஆ....... ஹொஹொஹொஹோ...
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா...
நிழல் போல் மறைந்தாள்.... லலாலலாலலாலலா...

பொட்டு வைத்த முகமோ... ஓஓஓஓஓ....
கட்டி வைத்த குழலோ... ஓஓஓஒ.....
பொன்மணிச் சரமோ.....
அந்தி மஞ்சள் நிறமோ... லலாலலாலலாலலா...
அந்தி மஞ்சள் நிறமோ... லலாலலாலலாலலா...

Monday, July 6, 2009

Aaseya bhava!..



Aaseya bhava!.. olavina jeeva ondaaagi bandide..
Aaseya bhava.. olavina jeeva ondaaagi bandide..

hosa bage gungina nishe taaneridantide
Aaseya bhava.. olavina jeeva ondaaagi bandide..

Aaseya bhava.. olavina jeeva ondaaagi bandide..
hosa bage gungina nishe taaneridantide
Aaseya bhava.. olavina jeeva ondaaagi bandide..

kannina sanneyali kaavyava neebarede
hejjeya bhavake hamsave naachide
gaaliya beesinali gaanavu neenaade
nannyede spandana ninnade chetana
premada leeleyali jevva bhavana kyavaride...

jeevana jyoti needuta shanti vaibhoga tandide.
hosa bage gungina nishe taaneridantide
Aaseya bhava.. olavina jeeva ondaaagi bandide..

doorada hrudayagala sanihada beageyali
vriahada veadane mugilanu seride
teerada daahadali neerida kaatharake
merere illida duditavu tumbiode
yavudo moodiyalli lookavella tuugi saagide
premada joodi baalali kuudi haayagi haadide
hosa bage gungina nishe taaneridantide
Aaseya bhava.. olavina jeeva... ondaaagi bandide..

Friday, July 3, 2009

பொன்மாலைப் பொழுது!...



ஹே ஹோ ஹ்ம்ம் லலலா
பொன்மாலைப் பொழுது

இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நானுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது

ஹ்ம்ம்..... ஹே ஹா ஹோ ஹ்ம்ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

(இது ஒரு....)

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

(இது ஒரு....)

Thursday, July 2, 2009

முள்ளில்லா ரோஜா!...



முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
பொன்னைப் போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் தன்னை
அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்

மான் என்னும் பேர் கொண்டு
பெண் ஒன்று வந்தது மார்பில் ஆடட்டும் (2)
ஏனென்று கேளாமல்
நான் இங்கு வந்த பெண் ஏக்கம் தீரட்டும் (2)
கண்ணுக்குள் கொஞ்சம் பாருங்கள்
என்னென்ன உண்டு கூறுங்கள்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
ஆஹாஆஆஆஆஆஆஅ.........
ஒஹோஓஓஓஓஓஓஓஒ.......

தேன் சொட்டும் கன்னங்கள்
நீ தொட்ட நேரத்தில் சிவந்துப் போகுமோ (2)
மோகத்தின் வேகத்தில்
நான் தந்த சின்னங்கள் மறைந்துப் போகுமோ (2)
சந்தித்தால் கொஞ்சம் தொல்லைதான்
சிந்தித்தால் இன்ப எல்லைதான்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
பொன்னை போல் நின்றேன்
பூவென்னும் என் உள்ளம் தன்னை
அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா
முத்தாரப் பொன் ஊஞ்சல் கண்டேன்
ஆஹாஆஆஆஆ.......
ஆஹாஆஆஆ........

Wednesday, July 1, 2009

சிப்பி இருக்குது!...



தந்த ந தத்த ந தைய ந தத்த ந தா ந ந
தத்த ந தா ந தைய ந தந்தா ந
ஹா ஹான்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
லல லலலல லல லலலல லல
லாலல லாலல லலலா லாலாலா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
எப்டி??
-ஹ்ம்ம்

(விசில்)
சந்தங்கள்
ந ந நா
நீயானால்
ரி ச ரி
ஹஹஹ
சங்கீதம்
ஹ்ம் ஹு ஹும்ம்
நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ஹாஆஆ
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
ஹ ஹ

ந ந ந நா ந
come on say it once again
ந ந ந நா ந
ம்ம்ம்ம்ம் சிரிக்கும் சொர்க்கம்
தர ந ந தர ந ந ந
தங்க தட்டு எனக்கு மட்டும்
ok?....
தானே தானே தானா
அப்படியா ம்ம்ம்
தேவை பாவை பார்வை..
தத்தன தனா
நினைக்க வைத்து
ந ந ந ந லல லல லால
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
ந ந ந ந ந ந நா த ந நா லலலா தர ந
beautiful
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ...

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி

சந்தங்கள் ஹஹஹ நீயானால் ஹஹஹ
சங்கீதம் ஹஹஹ நானாவேன் ஹஹஹ

இப்போ பார்க்கலாம்!...

தநந தநந ந நா
ம்ம்ம்ம்
மழையும் வெயிலும் என்ன
தன்ந நநா தநந நன்னா நன்னா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தன ந ந நா த ந ந ந நா த நா
அம்மாடியோ..
தன ந ந நா த ந ந ந நா த நா
ஆஆ
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
ஹ்ஹ்ம்ம்
கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய நான் உரைத்தேன்..


சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாடி கலந்திருப்பது எப்போது (2)
ஹ ஹ ஹ லலலா ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ ஹ ஹ
லலலா லலலா லலலா ல ல ல


இதுல முழுசா இருக்கும்

CHIPPI ERUKKUDHU.m...